“மாமா.. ஆடு மாமா; பத்து பத்து பால் விளையாண்டா 40 பால் ஆடலாம்”- தமிழில் பேசிய அஸ்வின்!

Default Image

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வீரர் அஸ்வின், போட்டியின்போது மறுமுனையில் இருந்த விகாரியிடம் தமிழில் பேசினார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று நடந்த 3 ஆம் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெறும் அளவில் இருந்த நிலையில், அவர்களின் வெற்றிக்கனவை இந்திய அணி பறித்து, டிரா செய்ததால், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது.

இந்தநிலையில், இந்த போட்டியின் பொது தமிழக வீரர் அஸ்வின், மறுமுனையில் இருந்த விஹாரியிடம் தமிழில் பேசினார். ஆந்திராவை சேர்ந்த விஹாரிக்கு தமிழ் தெரியும் என்பதால் அஸ்வின், அவரிடம் முழுவதுமாக தமிழில் பேசினார். மேலும் விகாரிக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு முழுவதுமாக ஊக்கமளித்தார். குறிப்பாக, “மாமா.. ஆடு மாமா”, “பத்து பத்து பால் விளையாண்டா 40 பால் ஆடலாம்” என அஸ்வின் பேசியது, தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.

அதுமட்டுன்றி, ஒவ்வொரு பந்திற்கும் முன் பவுலர்களை கணித அஸ்வின், விஹாரிக்கு தமிழில் இப்படி போடப்போறார் என தெரிவித்தார். அதில், “உள்ள வர வைக்குறாங்க, கவலப்படாத” “பால் ஸ்ட்ரெயிட்-ஆ தான் வரும் ” போன்ற வார்த்தைகளை கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்