ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் காலமானார்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான காலின் மெக்டொனால்ட், இன்று காலமானார். அவருக்கு வயது 92.
ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியின் 191-வது வீரரான காலின் மெக்டொனால்ட், கடந்த 1952 முதல் 1961 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி சார்பாக 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 3107 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதங்கள் அடங்கும். இவர், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் மிகச்சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவராக விளங்கினார்.
மேலும், விக்ட்டோரியா மாகாணம் சார்பில் விளையாடிய இவர், இதுவரை 192 போட்டிகளில் விளையாடி, 11,375 ரன்கள் எடுத்துள்ளார். தற்பொழுது அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, ஆசிரியராகவும், வர்ணனையாளராகவும் பணியாற்றினார். இந்தநிலையில் காலின் மெக்டொனால்ட் இன்று உயிரிழந்துள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இவரின் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
McDonald represented Australia in 47 Test matches across two decades, compiling 3,107 Test runs at an average of 39.32, including five centuries. He also played 192 first class matches for @VicStateCricket, finishing with 11,375 runs at an average of 40.48.
— Cricket Australia (@CricketAus) January 11, 2021