வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வருகிறது சியோமி மி மேக்ஸ் 3…!!!

Default Image

சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.இது மற்ற நிறுவனங்களலைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்த மாடல்களாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டு வெளிவரும் என அந்நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆன்லைனில் கசிந்த சியோமி மி மேக்ஸ் 3 புகைப்படத்தில் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்றை இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

வெளியான தகவலின்படி மி மேக்ஸ் 3 ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டு வெளவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். வீடியோ கேம், ஆப் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த சியோமி மி மேக்ஸ் 3 சாதனத்தில் 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சில பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொறுத்தவரை 3ஜிபி/4ஜிபி மற்றும் 64ஜிபி /128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் என அந்நிறுவனம்  சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அசத்தலான செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவரும்.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற  இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் சியோமி மி 7 ஸ்மார்ட்போன் மாடலை விட பல சிறப்பம்சங்களை கொண்டு மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு பொறுத்தவரை 16,842-இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review