எச்சில் ஊறும் எலுமிச்சை சாதம் இரண்டே நிமிடத்தில் செய்வது எப்படி?
பொடி இல்லாமல் வீட்டிலேயே உள்ள பொருள்களை வைத்து ஈசியாக இரண்டே நிமிடத்தில் அட்டகாசமான எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- கடுகு
- கடலை பருப்பு
- எலுமிச்சை பழம்
- காய்ந்த மிளகாய்
- பச்சை மிளகாய்
- கருவேப்பில்லை
- எண்ணெய்
- மஞ்சள் தூள்
செய்முறை
முதலில் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கடலை பருப்பை போட்டு தாளிக்கவும். அதன் பின்பு காய்ந்த மிளகாய் மற்றும் காரத்திற்கு ஏற்றவாறு பச்சை மிளகாய் ஆகியவற்றை கீறி போட்டு வதக்கவும். பச்சை மிளகாய் சேர்ப்பது தான் இந்த சாதத்திற்க்கான சுவையை அதிகரித்து கொடுக்கும். பின் எலுமிச்சை சாற்றை கலக்கவும்.
எண்ணையுடன் சேர்ந்து நன்றாக எலுமிச்சை சாறு சூடேறியதும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கருவேப்பில்லை போட்டு இறக்கிவிட்டு, சாதத்தை சேர்த்து கிளறினால் அட்டகாசமான எலுமிச்சை சாதம் தயார். தேவைப்படுவோர் கடலை பருப்பு சேர்க்கையில் கொஞ்சம் நிலக்கடலையையும் சேர்த்து கொள்ளலாம்.