சிட்னி டெஸ்ட்: ரிஷாப் பந்த் வலியுடன் விளையாடி 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர் விளாசல்..!
சிட்னியில் நடைபெற்றுவரும் 4 வது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது மற்றும் கடைசி நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ரிஷாப் பந்த் இரண்டாவது இன்னிங்சில் 5-வது இடத்தில் களமிறங்கினர். இந்த போட்டியில் ரிஷாப் பந்த் தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தை தவறவிட்டார்.
நாதன் லியோன் வீசிய பந்தை அடித்த ரிஷாப் பந்த் கேட்சை பாட் கம்மின்ஸ் பிடித்தார். இந்த இன்னிங்சில் 97 ரன்கள் எடுத்த பிறகு பந்த் அவுட்டானார். இதில் 12 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். ரிஷாப் பந்த் 65 பந்துகளில் அரைசதம் அடித்தார், அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.
மூன்றாவது நாள் நடைபெற்ற போட்டியில் ரிஷாப் பந்த்திற்கு ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். பின்னர், ரிஷாப் பந்த் விக்கெட் கீப்பிங்கிற்கு வரவில்லை. இதனால், ரிஷாப் பந்திற்கு பதிலாக விருத்திமான் சஹா விக்கெட் கீப்பிங் பொறுப்பில் இருந்தார். கிரிக்கெட் விதிகளின்படி, பேட்டிங் அல்லது விக்கெட் கீப்பிங்கின் போது ஒரு விக்கெட் கீப்பர் காயமடைந்தால், அவருக்கு பதில் சக விக்கெட் கீப்பரை விக்கெட் கீப்பிங்கிற்கு பதிலாக மாற்ற முடியும்
இருப்பினும், ரிஷாப் பந்திற்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் எலும்பு முறிவு இல்லை என்று ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டது. அவருக்கு கடுமையான வலி இருந்த போதிலும் இன்றைய கடைசி நாள் போட்டியில் ரிஷாப் பந்த் பேட்டிங் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தற்போது 5 விக்கெட்டை இழந்து 319 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.