தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அதுதான் ஆட்சியமைக்கும் – பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளை செய்து வருகின்றது. தமிழகத்தில் அதிமுக, திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளை கொடுக்கும் கட்சி உடன் கூட்டணி என்பது தேமுதிகவின் நிலைப்பாடு என தெரிவித்தார்.
தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணி தான் ஆட்சியமைக்கும். 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம், அதிமுக ஆட்சி தான் இதுவரை தொடர்கிறது. பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என கூறினார்.
சில நாட்களுக்கு முன் பேசிய பிரேமலதா இந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து வரும் ஜனவரி(அதாவது இந்த மாதம் ) இறுதிக்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.