எங்களுக்கு கூடுதல் விளம்பரம் செய்யும் அமைச்சர்களுக்கு நன்றி – கமல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடிகள், விளம்பரங்களை அகற்றி கூடுதல் விளம்பரம் ஏற்படுத்திய நன்றி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமனற்ற தேர்தல் நெருங்கி வருவதால், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று 5ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை சென்ற கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடிகள், விளம்பரங்களை அகற்றி கூடுதல் விளம்பரங்களை ஏற்படுத்தியதற்கு அமைச்சர்களுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எங்கள் கட்சியின் கொடிகள், விளம்பரங்களை அகற்றிய கோவை மாநகராட்சிக்கு நன்றி என்றும் இந்த ஆர்வத்தை மக்கள் பணியில் இவர்கள் காட்டிருந்தால் நாங்கள் அரசியலுக்கே வந்துருக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு சிறப்பான முடிவு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வைக்கப்பட்ட கொடிகள், விளம்பரங்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.