2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் ..!
24 மணிநேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை மழை பெய்யும். சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும், நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும். விருதுநகர், தென்காசி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.