ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம்.!
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்கள், பாட்டில்களால் தாக்கியத்துடன் 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி, சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கும் வரை கடலுக்கு செல்லப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.