62 பயணிகளுடன் புறப்பட்ட நான்காம் நிமிடத்தில் மாயமான விமானம்!
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டினாக்கை நோக்கி சென்றுகொண்டிருந்த ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான “போயிங் 737” ரக விமானம், ரேடாரில் இருந்து மாயமானது.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டினாக்கை நோக்கி ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், 62 பயணிகளுடன் ஜகார்தாவில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம், புறப்பட 4 ஆம் நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, விமானம் மறைந்தது.
SJ182 என்று அழைக்கப்படும் இந்த காணாமல் போன விமானம், “போயிங் 737” மாடல் என்றும், அந்நாட்டு நேரப்படி காலை 07:40 மணிக்கு ஜாவா கடற்பரப்பு வழியாக 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்கும் போது ரேடாருடனான தொடர்பை இழந்து மாயமானதால், பெண்டன் மாகாண எல்லைக்கு உள்பட்ட ஜாவா கடற்பரப்பில் விமானத்தை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Flight #SJ182 was operated by a Boeing 737-500 “classic” with registration number PK-CLC (MSN 27323). First flight for this aircraft was in May 1994 (26 years old). pic.twitter.com/2rakDifhTm
— Flightradar24 (@flightradar24) January 9, 2021