ஆளுநரை சந்தித்து ஒரு பொய்யான அறிக்கையை கொடுத்துள்ளார் – முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
தினந்தோறும் பொய் அறிக்கை வெளியிடுவதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் ,அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி,பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இதில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.குறிப்பாக மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவை பொறுக்க முடியாமல் முதல்வர் பழனிசாமியை பக்குவமின்றி விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுகவினருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், ஸ்டாலின் வேண்டுமென்றே செல்லும் இடமெல்லாம் அவதூறு பேச்சு.தினந்தோறும் பொய் அறிக்கை.அது தான் அவருடைய வாடிக்கையாக கொண்டுள்ளார்.அதனை முறியடிப்பதற்கு நாமும் தயாராக இருக்க வேண்டும்.ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்லி ஸ்டாலின் அதை உண்மையாக்க பார்க்கிறார்.பொய்யை தொடர்ந்து பேசி ஆட்சி மீது களங்கத்தை ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி செய்கிறார் .ஆட்சியும் ,கட்சியும் சிறப்பாக உள்ளதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.சமீபத்தில் கூட ஆளுநரை சந்தித்து ஒரு பொய்யான அறிக்கையை கொடுத்துள்ளார்.ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று தெரிவித்துள்ளார்.