பாஜக ஆதரவின்றி யாரும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது – எல் முருகன்
பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக மாநில தலைவர் எல் முருகன் பேசியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், இராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் இன்று ‘நம்ம ஊரு பொங்கல்’ கிராமிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் பாஜக நிலைநாட்ட முடியாது என்று, மற்ற அரசியல் கட்சிகள் எண்ணி வந்த நிலையில், தற்போது வேரூன்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு இடங்களில், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜக ஆதரவின்றி எந்த அரசியல் கட்சியும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. தமிழகத்தில் 65 லட்சம் குடும்பங்களுக்கு, இலவச எரிவாயு இணைப்புகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.6,000 அளிக்கப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும், பக்தர்கள் நீராட அனுமதி தர வேண்டும் என்று எல் முருகன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.