PF-சந்தாதாரர்களுக்கு மத்திய அரசின் புத்தாண்டு போனஸ்., விவரங்கள் உள்ளே.!

Default Image

கிட்டத்தட்ட 6 கோடி இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு பயனளிக்க பிரதமர் மோடி அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.

EPF சந்தாதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசு அளித்து வரும் புத்தாண்டு சிறப்பு போனஸ்கள் தொடர்கின்றன என ஊடகங்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அரசாங்கம் தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி அறக்கட்டளைகளை பாரத் பாண்ட் ETF போன்ற பொதுத்துறை கடன் ETF-களில் (பரிவர்த்தனை வர்த்தக நிதிகள்) முதலீடு செய்ய அனுமதித்துள்ளது.

அதாவது, ETF-கள் 4.5% முதல் 6.6% என்ற வரம்பில் லாபத்தைக் கொடுக்கின்றன என்றும் இது 2020 டிசம்பரில் FY20-ல் EPFO அறிவித்த, 8.5% வட்டி விகிதத்தை விட குறைவாகும் எனவும் கூறியுள்ளனர். EPFO தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யாது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவரப்படி, ETF-களில் EPFO முதலீடு செய்த மொத்த தொகை ரூ.86,966 கோடியாக இருந்தது.

கடந்த 2015ல் நடைபெற்ற 207 வது கூட்டத்தில் மத்திய அறங்காவலர் குழு (CBT), பணியாளர் வருங்கால வைப்பு நிதியம் (EPF), ETF-களில் மட்டும் பங்கு மற்றும் தொடர்புடைய முதலீடுகள் என்ற பிரிவில் முதலீடு செய்ய முடிவு செய்திருந்தது.

தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்குகளில் 2019-20 ஆம் ஆண்டிற்கான வட்டி வரவு வைப்பதில் அரசாங்கத்திடமிருந்து இறுதி ஒப்புதலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் சுமார் ஆறு கோடி EPF சந்தாதாரர்களுக்கு புத்தாண்டு போனசாக பிரதமர் மோடி அரசு 8.5% வட்டியை அளித்தது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்வார் கடந்த டிசம்பர் 31 ம் தேதி, பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் தொகைக்கு 8.5% வட்டியை அந்த நாளிலிருந்து பெறத் தொடங்குவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தற்போதும் தொடர்கிறது என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துலுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்