#BREAKING: தடுப்பூசி விநியோகம் – பிரதமர் மோடி ஆலோசனை.!

கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் திங்கட்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும் திங்கட்கிழமை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்டது. அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று மற்றொரு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகைகள் இதுவரை இரண்டும் முறை நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!
April 23, 2025
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025