டெலிகிராமுக்கு மாறும் வாட்ஸ் அப் பயனாளர்கள்!

Default Image

வாட்ஸ் அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates க்கு எதிர்ப்பு தெரிவித்து, டெலிகிராமுக்கு மாறும் வாட்ஸ் அப் பயனாளர்கள்.

வாட்ஸ்அப் ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. அதில், வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என தெரிவித்திருந்தது. பிப்ரவரி 8, முதல் நடைமுறைக்கு வரும் எனவும் வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் வாட்ஸ் அப் உபயோகிக்கும் அனைவருக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

பயனாளிகளின் தகவல்கள் அனைத்தையும் இனி பேஸ்புக்கிற்கு பரிமாறப்படும் என்றும் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பின் முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வாட்ஸ் அப் புதிய தனியுரிமை கொள்கைக்கு (New Privacy Policy) எதிர்ப்பு தெரிவித்து பயனாளர்கள் சமுக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவிட்டு வரும் நிலையில், வாட்ஸ் அப் கணக்கை நீக்கிவிட்டு டெலிகிராமுக்கு மாறுவதாகவும் பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே, ட்விட்டரில் #WhatsappNewPolicy என்ற ஹாஷ் டேக் ட்ரெண்டியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்