கவனத்திற்கு: ஜன.17 முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும்.!
நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும் என அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தடுப்பூசி தயாரிப்பு ஒத்திகை பணியை பார்வையிட்டார். இதன் பின் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய அவர், நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், 5 வயதிற்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து போடப்படும் என்றும் போலியோவை போல கொரோனாவையும் இந்தியாவில் இருந்து விரட்டி அடிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.