அஜய் தேவ்கன்,ரகுல் பிரீத் சிங் நடிக்கும் “ThankGod” படத்தின் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு .!
“ThankGod” படத்தில் நடிக்கும் அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் சிங்க் படப்பிடிப்பின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் அஜய் தேவ்கன் மீண்டும் பெரிய படத்தில் இணைந்துள்ளனர். இந்த நகைச்சுவை படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவும் நடிக்கிறார். படத்தின் பெயர் “தான்க் காட்” என வைக்கப்பட்டுள்ளது, இந்த படம் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 21 ஆம் தேதி தொடங்குகிறது. பூஷன் குமார், இந்திரகுமார், அலோக் தகாரியா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
இதற்கிடையில், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டின் அய்யாரி மற்றும் 2019-ல் மர்ஜாவான் படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இப்பொது மூன்றாவது படத்தில் இணைந்துள்ளனர்.
படத்தைப் பற்றி விவரித்த இந்திரகுமார், “இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நாங்கள் நீண்ட நேரம் காத்திருந்தோம்” என்றார். இப்போது, ஜனவரி 21ஆம் தேதி முதல் தொடங்கும் ‘தான்க் காட்’ படத்தில் நடிக்கும் அஜய் தேவ்கன், ராகுல் மற்றும் சித்தார்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டி-சீரிஸ் மற்றும் பூஷண் குமார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாம் சரியாக நடக்கும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
Happy to announce our next film, #ThankGod – a slice of life comedy starring @ajaydevgn, @SidMalhotra & @Rakulpreet. Directed by @Indra_kumar_9, the film is set to go on floors from 21st January 2021. The movie will give a sweet message to the audience, stay tuned! pic.twitter.com/hoX0c6xlo9
— T-Series (@TSeries) January 7, 2021