அமெரிக்க ஜனநாயகம் மீது தாக்குதல் – ஜோ பைடன் குற்றச்சாட்டு..!
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் 46-வது அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்க உள்ளார். ஆனால், ஜோ பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல குற்றச்சாட்டுகளை தற்போதைய அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
மேலும், தேர்தலில் மோசடி நடைபெற்றுளளதாக கூறி வரும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆயுதம் தாங்கிய டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் சென்றதை தொடர்ந்து அப்போது நடைபெற்ற வன்முறையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஜோ பைடன் வெற்றி ஏற்க மறுத்த டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தனர்.
இதுகுறித்து தற்போது அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் கூறுகையில், இது அமெரிக்க ஜனநாயகம் மீது தாக்குதல், நவீன காலத்தில் இது போன்ற ஒரு தாக்குதலை நான் பார்த்ததில்லை, தற்போது நிகழ்ந்து இருப்பது சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளார்.
Let me be very clear: the scenes of chaos at the Capitol do not represent who we are. What we are seeing is a small number of extremists dedicated to lawlessness. This is not dissent, it’s disorder. It borders on sedition, and it must end. Now.
— Joe Biden (@JoeBiden) January 6, 2021
அமெரிக்க தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் , டிவிட்டர் ஃபேஸ்புக் பக்கங்களில் டொனால்டு டிரம்ப் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோ பதிவு வன்முறையை தூண்டும் வகையில் இருந்து இருப்பதாக கூறி அவரது சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டன. இதையடுத்து டொனால்டு டிரம்ப் ட்விட்டர் 12 மணி நேரமும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் 24 நேரம் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.