கனமழை எதிரொலி: புழல் ஏரியில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக அடைக்கப்பட்டிருந்த புழல் ஏரியில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையில் மழை இன்றி காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்யத் துவங்கியுள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் அதிகாலை பெய்த கனமழை காரணமாக ஏரியிலிருந்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு அதன்பின் 1500 கன அடி வரை உயர்த்தப்பட்டு இருந்தது.
அதன்பின் நேற்று காலை ஏரிக்கு நீர்வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இன்று காலை கனமழை காரணமாக மீண்டும் புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 312 கன அடியாக உள்ள நிலையில், 177 கன அடி நீர் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்டு கொண்டிருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025