எச்சரிக்கை ! இதை சாப்பிடாதீங்க மக்களே ; இருதய நோய் கண்டிப்பாக வரும்!

Default Image

நமது முன்னோர்கள் அதிகமான ஆண்டுகள் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துள்ளனர் என்றால் அதற்க்கு காரணம் அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் தான். தற்போதைய நவீன காலகட்டத்தில் இருந்த இடத்துக்கே வந்து சேரும் உணவும், இரண்டே நிமிடத்தில் தயாராகும் உணவுகளும் தான் அதிகமாக நாம் உட்கொள்கிறோம். இதனால் தான் 50 வயதிலேயே மாரடைப்பு, இருதய கோளாறு, சுகர், இரத்த அழுத்தம் ஆகியவை ஏற்பட்டு விரைவில் மரணம் ஏற்படுகிறது. அதிலும் அதிகமாக இருதய நோய்களால் தான் பலர் இறக்கின்றனர். இருதயத்தை பாதிக்கக்கூடிய சில உணவு வகைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 

இனிப்பு, உப்பு, கொழுப்பு

வயதாகிய பின் இனிப்பு, உப்பு மற்றும் கொழுப்புகளை குறைத்து கொள்ள விரும்புபவர்கள் அதை முன்கூட்டியே செய்யலாம். ஏனென்றால் முன்பிருந்து நாம் உட்கொண்டு வரக்கூடிய அதிகப்படியான இனிப்பு, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் தான் வயதாகிய பின் ஏற்பட கூடிய மாரடைப்புக்கு முக்கியமான காரணமாகிறது.

பன்றி இறைச்சி

பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு முழு முதல் காரணமாக அமைவது பன்றி இறைச்சி தான். இதிலுள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் உப்பு காரணமாக இரத்த அழுத்தத்தை அதிகரித்து இருதயத்தை பலமிழக்க செய்கிறது. மேலும், பன்றி இறைச்சி போலவே சிவப்பு நிறத்தில் காணப்படக்கூடிய ஆடு மற்றும் மாட்டின் இறைச்சியில் இருந்த கோளாறு மற்றும் மாரடைப்புக்கு காரணமாக அமைகிறது.

சோடா

சோடா என்றாலே நீருடன் கரியமில வாயு கலந்த கலவை தான். இந்த சோடாக்களில் நாம் நாள் ஒன்றுக்கு சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடிய சர்க்கரையின் அளவை விட அதிகளவு சர்க்கரை உள்ளது. இதன் காரணமாக இதய நோய் வருவதுடன், நீரிழிவு நோயும் ஏற்படுகிறது. அதிகம் சோடாவை விரும்புபவர்கள் குறைவான இனிப்பு கலந்த சோடாவை மிதமாக எடுத்து கொள்வதன் மூலம் இதய நோய் வராமல் தடுக்கலாம்.

கேக், குக்கீஸ்

பேக்கிங் செய்யப்பட்ட கேக், குக்கீஸ் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இந்த உணவுகள் அனைத்தும் வெள்ளை மாவில் செய்யப்படுகிறது. இந்த மாவில் அதிகளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு காணப்படுவதால் உடல் எடை அதிகரிக்க செய்வதுடன் மாரடைப்பு ஏற்படுவதற்கும், இதய கோளாறுகள் உண்டாவதற்கும் காரணமாகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்படும் இறைச்சிகளில் அதிகளவு உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதில் அதிகம் நிறைவுற்ற கொழுப்புகளும் உள்ளது.

வெள்ளை மாவு உணவுகள்

வெள்ளை அரிசி, பிரட், பாஸ்தா ஆகிய வெள்ளை மாவுகளை வைத்து தயாரிக்க கூடிய உணவுகளால் இதய நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. இந்த வெள்ளை மாவில் நார்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் எதுவுமே கிடையாது. மாறாக இதய நோய் மற்றும் நீரழிவு நோயை ஏற்படுத்தக்கூடிய கொழுப்புகள் தான் அதிகம் உள்ளது.

பீஸ்ஸா

பீஸ்ஸா நாம் வீட்டில் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமான ஒன்று தான். ஆனால், பதப்படுத்தி கடைகளில் விற்கக்கூடிய பீஸ்ஸா தான் சுவையாக இருக்கிறது என வாங்கி சாப்பிடுகிறோம் அல்லவா, அந்த பீஸ்ஸாவில் சோடியம் தான் அதிகம் காணப்படுகிறது. சுவை மட்டுமே மிஞ்சும் மற்றபடி இதய ஆரோக்கியத்தை முற்றிலும் கெடுக்க கூடியது.

பொரித்த கோழி இறைச்சி

கோழி இறைச்சியை பொரித்து சாப்பிடுவது இதயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இந்த இறைச்சியை சாப்பிடுவதால் உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதுடன் இதயம் செயலிழக்கவும் காரணமாகிறது.

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீமில் அதிகளவு சர்க்கரை, கலோரிகள் மற்றும் கொழுப்புகள் காணப்படுவதால் உடல் எடையை அதிகரிக்க செய்வதுடன் அதிகளவில் தொடர்ச்சியாக உட்கொள்ளும் போது மாரடைப்பு ஏற்படவும் காரணமாகிறது.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

உருளைக்கிழங்கு வறுவலில் அதிகளவு உப்பு மற்றும் கொழுப்பு காணப்படுவதால், உடல் எடையை அதிகரிக்க செய்வதுடன் இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் உருவாகவும் காரணமாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price
Goutam Adani - Hndenburg Research
Space Docking Experiment - ISRO
IRE vs IAND