ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு தேதி – இன்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர்

ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் இன்று வெளியிடுகிறார் மத்திய அமைச்சர்.
நாடு முழுவதும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி., என்.ஐ.டி. உள்பட) சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு முதல் ஜே.இ.இ. முதன்மை தேர்வை 4 முறை நடத்த மத்திய கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. அதுவும், நீட் தேர்வை போல 13 மொழிகளில் ஜே.இ.இ. தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி, வரும் 16-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆ
ன்லைன் மூலமாகவே இந்த தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்த நிலையில், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025