இரண்டே நிமிடத்தில் மொறு மொறுப்பான ஈவினிங் ஸ்நாக்ஸ்!
மாலை நேரத்தில் டீ, காபியுடன் ஏதாவது மொறு மொறுப்பாக சாப்பிட வேண்டும் என விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. உங்கள் வீட்டில் கோதுமை மாவு இருக்கிறதா? இரண்டு நிமிடம் போதும் மொறு மொறுப்பான மாலை நேர உணவு வீட்டிலேயே தயாரிக்கலாம், எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- கோதுமை
- வெங்காயம்
- மல்லி இலை
- பச்சை மிளகாய்
- உப்பு
செய்முறை
முதலில் ஒரு கப் கோதுமை மாவை நன்றாக சலித்து எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பிரட்டவும். அதன் பின் தண்ணீரில் லேசாக உப்பு போட்டு கலந்து எடுத்து கொள்ளவும்.
அதன் பின் மாவு கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலக்கி பிசைந்து எடுத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டையாக போடவும். பொன்னிறமாக வந்ததும் இறக்கினால் அட்டகாசமான கோதுமை வடை தயார்.