வந்த நாளிலிருந்து இந்தநாள் வரைக்கும் ஆரி தான் மற்றவர்களை குறை சொல்றாரு!
வந்ததிலிருந்து ஆரி தான் பிறரை குறை சொல்லிக்கொண்டே இருப்பதாக சோம் மற்றும் ரியோ கூறியுள்ளனர்.
இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆரி, ரியோ, சோம், ரம்யா, பாலா, சிவானி, கேபி ஆகியோர் மட்டுமே உள்ளனர். இறுதி சுற்றுக்கு நேரடியாக செல்லக்கூடிய வாய்ப்பை இந்த வாரத்தில் ஒரு போட்டியாளர் பெறவுள்ள நிலையில், இன்று பிறரது குறைகளை சொல்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று தான் குறை சொல்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக துவங்கிய சோம் வந்த நாள் முதல் தற்போது வரை ஆரி தான் பிறரது குறைகளை கூறி கொண்டிருப்பதாக சொல்லுகிறார். மேலும் ரியோவும் ஆரியை குறிப்பிட்டு அவர் தான் பிறர் குறைகளை கூறி கொண்டே இருக்கிறார், மற்றபடி அவரது விளையாட்டை விளையாடினால் அவர் முன்பு யாரும் இருக்க முடியாது என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram