ஒன்பிளஸ் நார்டு வைத்திருப்பவர்களா நீங்கள்? இதோ.. உங்களுக்கான சூப்பரான அப்டேட்!
ஒன்பிளஸ் நார்டு பயனர்களுக்கு ஒன்பிளஸ் நிறுவனம், ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 11-ன் பீட்டா வெர்சனை வெளியிட்டுள்ளது.
சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், கடந்தாண்டு தனது பட்ஜெட் போனான ஒன்பிளஸ் நார்டை அறிமுகப்படுத்தியது. இந்த போன், அனைவரின் மனதை கொள்ளை கொண்டு, இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், பயனர்கள் ஒன்பிளஸ் மொபைலை விரும்ப காரணம், அதன் ஆக்ஸிஜன் ஓஎஸ் UI. இதில் சிறிய bug-ஐ கண்டறிந்தாலும், உடனே அப்டேட் கொடுத்து சரிசெய்வதே ஆகும்.
இந்தநிலையில், ஒன்பிளஸ் நிறுவனம், ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 11-ன் பீட்டா வெர்சனை ஒன்பிளஸ் நார்டு மொபைலுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. உங்களின் பிரைமரி மொபைல் ஒன்பிளஸ் நார்டு என்றால், இந்த பீட்டா வெர்சனை இன்ஸ்டால் செய்யாதீர்கள். ஏனெனில், அதில் அதிகளவிலான பக்ஸ் இருக்கும். அதனால் ஸ்டேபிள் வெர்சன் வரும்வரை காத்திருக்கலாம்.
ஆக்ஸிஜன் ஓஎஸ் 11-ன் பீட்டா வெர்சனை பதிவிறக்கம் செய்ய உங்கள் மொபைலில் குறைந்தது 30 சதவீதம் சார்ஜ் மற்றும் 3 ஜிபி ஸ்பெஸ் இருக்க வேண்டும். மேலும், இதில் ஆண்ட்ராய்டு 11-ல் உள்ள அனைத்து வசதிகளும் இடம்பெற்றிருக்கும் எனவும், இதில் புதிய UI டிசைன் உள்ளதாகவும், third party ஆப்ஸ்-க்கு சிறந்த stabilisation, உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளது.