காங்கிரஸ் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலைப் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை…!
காங்கிரஸ் கட்சியின் பவன் கேரா , ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக் வலியுறுத்தியுள்ளார். பியூஷ் கோயலின் மனைவி ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கிய நிறுவனம் நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் முப்பதாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாகக் காங்கிரசின் பவன் கேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பியூஷ் கோயலின் குடும்பத்தினரின் நிறுவனங்கள், அவர்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்கள் குறித்துப் பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் பவன் கேரா வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.