#Team11 Ind vs Aus :நடராஜன் இல்லாத 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

Default Image

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ரஹானே தலைமையிலான 11 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் விவரம் : 

அஜின்கியா ரகானே , ரோகித் சர்மா ,சுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா,ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த்,ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின்,பும்ரா,முகமது சிராஜ், நவதீப் சைனி,


தமிழக வீரரான நடராஜன் அணியில் இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.இதற்கு முன்னதாக முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சைனி தேர்வு பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.அவர் கூறுகையில்.மூன்றாவது வேகப்பந்து வீச்சாளருக்கான தேர்வில் இந்தியாவின் முதல் தேர்வாக நவ்தீப் சைனி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்