இவர்களுக்கு தொடர்புண்டு., ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லாமல் சிபிஐ விசாரிக்க வேண்டும் – கேஎஸ் அழகிரி

Default Image

பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லாமல் சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் என கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர், மத்திய புலனாய்வு துறைக்கு (சிபிஐ) ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்த், மணிவண்ணன், சதீஸ் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக நேற்று பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹெரென் பால், பாபு ஆகிய மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு கோவை மகிளா நீதிமன்றம் பிறப்பித்தது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கூறுகையில்,  அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து குற்றவாளிகளுக்கு நெருக்கமானவர்கள் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கை ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லாமல் சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்