பள்ளிகள் திறப்பு : நாளைக்குள் கருத்து கேட்க உத்தரவு!
நாளை மாலை 5 மணிக்குள் தலைமையாசிரியர்கள் பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்து தொகுப்பினை சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து, இன்று முதல் 8-ம் தேதி வரை பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது நாளைக்குள் கருத்து கேட்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பள்ளி கல்வி துறை இயக்குனர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கருத்து கேட்பு கூட்டமானது நாளைக்குள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை மாலை 5 மணிக்குள் தலைமையாசிரியர்கள் பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்து தொகுப்பினை சமர்ப்பிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.