எந்த நேரமும் போர் வரலாம் தயாராக இருங்கள் சீன அதிபர் ராணுவத்திற்கு உத்தரவு
இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள லடாக் எல்லை பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.லடாக் பிரச்சனைக்கு தீர்வு காண பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது ஆனால் அது ஒன்றும் பயனளிக்காமல் போனது.இருதரப்பு ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டு வருகிறது.சமீபத்தில் சீனா லடாக் எல்லையில் 35 பீரங்கியை நிறுத்தியது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.
சீனாவின் இந்த அடாவடி போக்கை சமாளிக்க இந்திய ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தனது ராணுவத்திற்கு வெளியிட்டுள்ள உத்தரவில் “எந்த நேரமும் போர் வரலாம் அதற்கு தயாராக இருங்கள்” என்று கூறியுள்ளார்.இந்த உத்தரவு இந்தியா-சீனா இடையே போர் மூளும் சூழலை அதிகரித்துள்ளது.
இதுபோன்ற உத்தரவை 2018 ஜனவரியில் வெளியிடப்பட்டது, வடக்கு சீனாவில் ஒரு துப்பாக்கிச் சுடும் பயிற்சி முகாமின் தொடக்க விழாவில் ஜி ஜின்பிங் இவ்வாறு கூறினார்.