தேசிய பேரிடர் மேலாண்மை குழுவில் சேர்க்கப்பட்டுள்ள 100 க்கும் மேற்பட்ட பெண்கள்!
உத்திரபிரதேச மாநிலத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவில் புதியதாக 100 பெண்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தேசிய பேரிடர் மேலாண்மையில் மீட்பு பணிக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குனர் எஸ் என் பிரதான் அவர்கள் பெண்கள் முழுமையான மீட்பு பணியாளராக பயிற்றுவிக்கபடுவார்கள் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் உத்தரப்பிரதேச அரசு தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரை அழைத்தபோது பெண்கள்தான் அங்கு சென்று மீட்பு பணியை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறிது காலமாகவே பெண்களை மீட்புப்பணியில் சேர்க்கக்கூடிய வேலை நடைபெற்று வருவதாகவும், கடந்த சில மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் பதவிகளில் சேர்ந்து உள்ளதாகவும் தற்போது இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் பயிற்சி அளித்து முடித்த பின்பு மீண்டும் அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.