புத்தாண்டு தினத்தன்று சீனாவை விட இந்தியாவில் இருமடங்கு குழந்தை பிறப்பு – யுனிசெப்
இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு தினத்தன்று 33 ஆயிரத்து 615 குழந்தைகளும், இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
2021 புத்தாண்டு தினத்தன்று இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. உலகிலேயே இதுதான் அதிகம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு தினத்தன்று உலகம் முழுவதும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 504 குழந்தைகள் பிறந்துள்ளதாக யூனிசெப் மதிப்பிட்டுள்ளது. அதில் 52 சதவீத குழந்தைகள் 10 நாடுகளில் பிறந்துள்ளன. இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு தினத்தன்று 33 ஆயிரத்து 615 குழந்தைகள் பிறந்துள்ளன. மேலும் இந்த ஆண்டு 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் எனவும் யுனிசெஃப் கணக்கிட்டுள்ளது.
யுனிசெப் செயல் இயக்குனர் henrietta fore கூறுகையில், இந்த ஆண்டு பிறந்த குழந்தைகள் முற்றிலும் மாறுபட்ட உலகில் பிறந்துள்ளன என்றும், இந்த கொரோனா தொற்று அனைத்தையும் மாற்றியுள்ளது என்றும், யுனிசெஃப் உதவி பலருக்கு தேவைப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இருப்பினும் 2020 புத்தாண்டு தினத்தை ஒப்பிடும்போது, இந்தியாவில் இந்த ஆண்டு 7,390 குழந்தைகள் குறைவாகவே உள்ளனர் என தெரிவித்துள்ளார்.