#BreakingNews : நாடு முழுவதும் ஜனவரி 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்- மத்திய அரசு

Default Image

நாடு முழுவதும் வரும் 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசி உள்ளன.

ஆகவே ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் நாடு முழுவதும் வரும் 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். நாட்டில் நான்கு இடங்களில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.அதாவது சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னல் பகுதிகளில் தடுப்பூசி பாதுகாப்பு மையங்கள் நிறுவப்படும்.முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்