சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த வழக்கில் தூக்குதண்டனையை எதிர்த்து குற்றவாளி தஷ்வந்த் மேல்முறையீடு….!
சென்னை உயர்நீதிமன்றத்தில் போரூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த வழக்கில் தூக்குதண்டனையை எதிர்த்து குற்றவாளி தஷ்வந்த் மேல்முறையீடு செய்துள்ளான்.
செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்து தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சான்று பொருட்கள் பறிமுதல் செய்ததில் சட்ட விதிமுறைகள் பின்பற்றபடவில்லை என்பதையும், சாட்சிகள் முன்னுக்கு பின் முராணாக பேசியதை விசாரணை நீதிபதி கவனிக்க தவறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தஷ்வந்த் கோரியுள்ளார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் விமலா மற்றும் ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் மனு மீது 4 வாரத்தில் பதில் அளிக்க மாங்காடு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.