ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இருந்து ராகுல் விலகல்
வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியதை தொடர்ந்து, கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் ரோஹித் சர்மா இந்திய அணியுடன் இணைந்துள்ள நிலையில், டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் பின்பு 3-வது போட்டி வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.கடைசி டெஸ்ட் போட்டி 15-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சனிக்கிழமை இந்தியா அணி வலைக பயிற்சி மேற்கொண்டு இருந்தது.அந்த சமயத்தில் பேட் செய்யும் போது கே.எல்.ராகுலின் இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.ஆகவே பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ராகுல் விளையாடமாட்டார்.மேலும் அவர் முழுமையாக குணமடைந்து முழு பலத்தையும் பெற மூன்று வார காலம் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் இப்போது இந்தியாவுக்குத் திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPDATE: KL Rahul ruled out of Border-Gavaskar Trophy.
More details ???? https://t.co/G5KLPDLnrv pic.twitter.com/S5z5G3QC2L
— BCCI (@BCCI) January 5, 2021