விஜய் சேதுபதி மற்றும் ரெஜினாவின் முகிழ் – புகழும் இயக்குனர் கார்த்திக்!
இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ள முகிழ் திரைப்படம் 100% ரசிகர்களின் பாராட்டுக்கு தகுதியான படமாக இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள முகிழ் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். இந்த படத்திற்கான ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் கார்த்திக் அவர்கள், இந்த படம் ரசிகர்களின் பார்வைக்கும் பாராட்டுக்கும் 100 சதவிகிதம் தகுதியானதாக இருக்கும் எனவும், ஒரு பேமிலி மேனாக எனக்கு நிறைவை தந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த படத்தில் கதாநாயகி ரெஜினா தான் அவருக்கு டப்பிங் செய்ததாகவும், இதுவே அவருக்கு டப்பிங்கில் முதல் முறை எனவும் கூறியுள்ளார். இந்த படத்தில் குழந்தையை பெற்றோர்கள் எப்படி வளர்க்கிறார்கள் எனவும், அந்த குழந்தைக்கு ஒரு பிரச்சனை வந்தால் அதை எப்படி கையாளுகிறார்கள் என்பதும் தான் கூறப்பட்டிருக்கும். இது தான் கதை எனவும் அவர் கூறியுள்ளார்.