முகத்தில் உள்ள கரும்புள்ளி உங்கள் அழகை கெடுக்கிறதா? இதோ உங்களுக்கக ஒரு சூப்பர் டிப்ஸ்!

Default Image

நமது சருமத்தில் பலருக்கும்  முகப்பருக்கள் ஏற்படுவது வழக்கம். இந்த கரும்புள்ளியை எவ்வாறு இயற்கையான முறையில் போக்குவது எப்படி என்பது பற்றி பார்ப்போம். 

நமது சருமத்தில் பலருக்கும்  முகப்பருக்கள் ஏற்படுவது வழக்கம். ஆனால், அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், அந்த பருக்களை பலரும் தங்களது நகத்தினால் கிள்ளி விடுவதுண்டு.  இதனால், அது மேலும் காயமடைந்து கரும்புள்ளியாக மாறி விடுகிறது. தற்போது இந்த கரும்புள்ளியை எவ்வாறு இயற்கையான முறையில் போக்குவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • துளசி இலை
  • வேப்ப இலை கொழுந்து
  • கடலை மாவு
  • எலுமிச்சை சாறு

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் துளசி இலை மற்றும் வேப்ப இலை கொழுந்து இரண்டையும் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் நிழலில் காய வைத்து இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் கடலை மாவு சேர்த்து, சிறிது எலுமிச்சை பழசாறு கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து முகம் பளபளப்பாக மாறி விடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்