அரசாங்கப் பணம் அரசாங்கத்துக்கு வந்து சேரும் – திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மினி கிளினிக் திறப்பு விழாவில் கலந்து, குத்து விளக்கேற்றி நிகழ்வை துவக்கி வைத்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
திண்டுக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொம்பையன்பட்டியில் அரசின் மினி கிளினிக் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின் மேடையில் சீனிவாசன் பேசிக்கொண்டிருந்தபோது, குடிபோதையில் இருந்த தொண்டர் ஒருவர், ‘பொங்கல் பரிசு தொகுப்பிற்கான கூப்பன் தனக்கு கிடைக்கவில்லை.’என குற்றம்சாட்டினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், டாஸ்மாக்கோட பெரிய கொடுமையை போச்சி, எப்படி எல்லாம் கேள்வி கேட்கிறார் பாருங்க! இவருக்குக் கொடுக்கப்படும் காசு டாஸ்மாக் மூலம் மீண்டும் நமக்குத்தான் வரும். இவர் காசு எங்கேயும் போகாது. அரசாங்கப் பணம் அரசாங்கத்துக்கு வந்து சேரும். வேட்டி, சேலை, அரிசி, பருப்பு, கரும்பு கொடுக்கிறது எல்லாம் அவர் மனைவிக்கு போய்விடும். கரும்பை பாதி விலைக்கு விற்க முடியாது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025