என்ன துணிச்சல்…!!! அப்ப…பப்ப..!! வனத்துறையினரின் மோட்டார் சைக்கிள் ரேஸ்…!!!

Default Image

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு இடத்தில் ஒரு பெண் சிறுத்தைப்புலி மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர். உடனே, வனச்சரகர் தயா சங்கர் திவாரிக்கு தகவல் தெரிவித்தனர். திவாரி, தனது உதவியாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

பெண் சிறுத்தைப்புலியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூண்டு அனுப்புமாறு மண்டல வன அதிகாரியிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். ஆனால், கூண்டு வர தாமதம் ஆனது. சிறுத்தையின் உடல்நிலையும் மோசமாகிக்கொண்டிருந்தது.

அப்போதுதான், சிறுத்தை கண் விழித்தால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும், துணிச்சலாக அதை மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்து  ஒரு ஊழியர், 2 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று. அங்கிருந்த ஒரு கூண்டில் அடைத்து சிறுத்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பெண் சிறுத்தைப்புலி, உரிய நேரத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையால் உயிர் பிழைத்தது. அதை 2 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்து விட்டு காட்டில் விட முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்