பிரதமர் நரேந்திர மோடி தமிழக பயண விவரம் வெளியீடு …!

Default Image

நாளை காலை 9.20-க்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய, மாநில அரசின் மனுக்கள் மீதான வுசாரணை கடந்த 9-ந் தேதி உச்சநீதிமறத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மத்திய அரசு வரைவுத் திட்டத்தை செயல்படுத்தி மே 3ஆம் தேதி சமர்பிக்க வேண்டும் என விசாரணையை மே 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் பிரதமர் மோடி நாளை தமிழகம் வரும் போது, அனைத்து வீடுகளிலும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடியை கட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில் நாளை காலை 9.20-க்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். மாமல்லபுரத்திலிருந்து சாலை மார்க்கமாக திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சிக்கு பிரதமர் காலை 10 மணிக்கு செல்கிறார் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்