வன்முறை கலாச்சாரத்தை கிள்ளி எறிய வேண்டும்…!!! ரஜினி காட்டம்…!!!
ஐ.பி.எல்லுக்கு எதிரான போராட்டத்தின்போது, சீருடையில் இருந்த காவலர்கள் தாக்கப்பட்டது வன்முறையின் உச்சக்கட்டம் என நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல்லுக்கு எதிரான போராட்டத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது, போராட்டக்காரர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர்
இந்த காட்சிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நடிகர் ரஜினிகாந்த், கண்டனம் தெரிவித்துள்ளார். வன்முறையின் உச்சக்கட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால், நாட்டுக்கே பேராபத்து என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.