தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது.
கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பணிகளில் பல நாடுகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.இதில் சில நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆகவே அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கான ஒத்திகை நாளை மேற்கொள்ளப்படுகிறது.இது அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும், குறைந்தது மூன்று இடங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சில மாநிலங்களையும், போக்குவரத்து சிக்கல் உள்ள மாவட்டங்களையும் இந்த ஒத்திகைக்குப் பயன்படுத்த உள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,தமிழகத்தில் சென்னை,நீலகிரி,திருநெல்வேலி ,கோவை ,திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா ஒத்திகை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.