இப்போதைக்கு ஓய்வா? நோ சான்ஸ்.. இன்னும் இரண்டு உலகக்கோப்பை ஆடுவேன்- கிறிஸ் கெயில்!

இப்போதைக்கு ஓய்வு அறிவிக்கும் திட்டமில்லை எனவும், இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் என யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில், தனது கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 103 டெஸ்ட், 301 ஒருநாள் மற்றும் 58 டி-20 தொடர்களில் விளையாடி, பல சாதனைகளை கைப்பற்றியுள்ளார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள், அவரை “யுனிவர்சல் பாஸ்” என செல்லமாக அழைத்து வருகின்றனர். 41 வயதானலும், தற்பொழுது வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கிறிஸ் கெயில், ஏஎன்ஐ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர், இப்போதைக்கு ஓய்வு அறிவிக்கும் திட்டமில்லை என கூறிய கெயில், இன்னும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன். 45 வயதுக்கு முன்னால் ஓய்வினை அறிவிக்க சான்ஸே இல்லை என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இன்னும் 2 உலகக்கோப்பைகள் ஆட வேண்டியவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025