மாஸ்டர் படத்திற்க்காக மட்டும் நடிகர் விஜய் என்னை சந்திக்கவில்லை- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

Default Image

மாஸ்டர் படத்திற்க்காக மட்டும் நடிகர் விஜய் என்னை சந்திக்கவில்லை என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்மேலும் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

கடந்த மாதம் தமிழக அரசு அறிவித்தபடி திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்த நிலையில் , திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு உச்சவரம்பின்றி பணி செய்ய அனுமதி வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே  நடிகர் விஜய், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் சந்திப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில்,மாஸ்டர் படம் என்று அல்ல ,அனைத்து படங்களும் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது .அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து ,படம் தயாரித்து உள்ளார்கள்.பலர் பெரும் நஷ்டத்தில் உள்ளதாகவும் ,அதை பார்த்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று விஜய் கூறியதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
MK Stalin - Amithsha
AmitShah - Rajya Sabha
ravichandran ashwin
AUSvsIND
Arul
Ashwin announces retirement