கொரோனா பரவலை தடுக்க இங்கிலாந்தில் “நான்கடுக்கு” ஊரடங்கு!
இங்கிலாந்தின் வடகிழக்கு, தென்மேற்கு பகுதிகள் மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் நான்கடுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, சில தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
அந்தவகையில், இங்கிலாந்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ் பரவதொடங்கியதை தொடர்ந்து, அந்நாட்டில் இங்கிலாந்து உட்பட பல இடங்களில் மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் அதிகளவில் பரவிவரும் நிலையில், இங்கிலாந்தின் வடகிழக்கு, தென்மேற்கு பகுதிகள் மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் நான்கடுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். இந்த உருமாறிய கொரோனா வைரல், பிரான்ஸ், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.