இந்தியாவில் சில நாட்களில் தடுப்பூசி கிடைக்கும் – எய்ம்ஸ் இயக்குனர்

Default Image

இந்தியாவில் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் பற்றிய கவலைகளுக்கு மத்தியில், எய்ம்ஸ் டெல்லி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இங்கிலாந்தில் பயன்படுத்த ஒப்புதல் பெறுவது ஒரு  பெரிய முன்னேற்றம் என்றும் தடுப்பூசி இந்தியாவுக்கு கிடைப்பதற்கு சில நாட்கள் தான் இருப்பதாகவும் கூறினார்.

அஸ்ட்ராசெனெகா அதன் தடுப்பூசிக்கு இங்கிலாந்து ஒழுங்குமுறை அதிகாரிகளால் நேற்று ஒப்புதல் பெற்றது இது ஒரு நல்ல செய்தி. இந்தியாவில் அதே தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) உருவாக்கி வருகிறது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளுக்கும் ஒரு பெரிய படியாகும் என்று குலேரியா ANI செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்தார்.

இதற்கிடையில், புனேவை தளமாகக் கொண்ட SII, உலகளாவிய மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட் என்ற தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் கோரியுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா  கோவிஷீல்ட் ரோல்அவுட் ஜனவரி மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் 40-50 மில்லியன் டோஸ் தடுப்பூசி ஏற்கனவே கையிருப்பில் உள்ளது என்றும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்