டெஸ்ட் தரவரிசை பட்டியல்: ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த வில்லியம்சன்!
ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், 870 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசைக்கான டி-20 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடம் வகித்த நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளி நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 890 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 129 ரன்கள், எடுத்ததால் அவர் தரவரிசையில் முதலிடம் பிடிக்க காரணமாக கூறப்படுகிறது.
இரண்டாம் இடத்தில் 879 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தில் 877 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும், 6 ஆம் இடத்தில் ரஹானே இடம்பெற்றுள்ளார்.
How it started v how it’s going ???? pic.twitter.com/XKyEJUgUAS
— ICC (@ICC) December 31, 2020
பந்துவீச்சு தரவரிசைப்படி, 906 புள்ளிகளுடன் பாட் கமின்ஸ் முதலிடத்தில் உள்ளார். 2ம் இடத்தில் 845 புள்ளிகளுடன் ஸ்டூவர்ட் ப்ரோடு, 3ம் இடத்தில் 833 புள்ளிகளுடன் நீல் வாக்னர், டிம் சவுதி 4ம் இடத்திலும், ஸ்டார்க் 5ம் இடத்திலும், ரபாடா 6 ஆம் இடத்திலும், இந்திய வீரர் அஸ்வின் 7 ஆம் இடத்திலும், ஜோஷ் ஹேசில்வுட் 8 ஆம் இடத்தில், இந்திய வீரர் பும்ரா 9 அம இடத்திலும், ஆண்டர்சன் 10 ஆம் இடத்தில் உள்ளனர்.
???????? Mitchell Starc enters top five
???????? R Ashwin jumps to No.7
???????? Jasprit Bumrah becomes No.9Latest update in the @MRFWorldwide ICC Test Rankings ???? https://t.co/OMjjVwOboH pic.twitter.com/RLU1nMpfoV
— ICC (@ICC) December 31, 2020