மங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 144 தடை உத்தரவு.!
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மங்களூரு நகரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா: கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக மங்களூரு நகரில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் விகாஷ் குமார் மற்றும் மங்களூரு நகரத்தின் கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இந்த தடை உத்தரவுகள் இன்று மாலை 6 மணி முதல் 2021 ஜனவரி 1 ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கிளப்புகள், பப்கள், உணவகங்கள் மற்றும் பிற அதிக அளவில் ஈர்க்கும் சிறப்பு நிகழ்வுகள் ஆகியவைற்றிக்கு தடை விதிக்கப்ட்டுள்ளது. மேலும், பொது இடங்களிலும் சாலைகளிலும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்களைச் கூட்டுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.