சவுதி சமூக நல ஆர்வலருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை!

Default Image

அரசுக்கு எதிராக செயல்படுவதாக சவுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான பெண்மணிக்கு ஹத்லோல் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கி பிரபலமானவர் தான் சவுதி அரேபியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹத்லோல். இந்நிலையில், இவர் சவுதிக்கு எதிராக செயல்படுவதாகவும் வெளிநாடுகளின் தவறான போக்குகளுக்கு ஆதரவளிப்பதாகவும் எழுந்த சந்தேகத்தின் பேரில் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பின் அவருக்கு தீர்ப்பு வழங்கப்படாமல் இரண்டு ஆண்டுகள் வரை அவர் சிறையிலேயே கழித்து விட்டார். இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தில் இவருக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில் ஐந்து ஆண்டுகள் மற்றும் எட்டு மாதம் இவருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் இரண்டு ஆண்டுகள் பத்து மாதம் சிறையில் இருந்து உள்ளதால், அந்த நாட்களை கழித்து மீதமுள்ள நாட்கள் சிறையில் இருக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை அவரது குடும்பம் மிகவும் கண்டித்ததுடன் அவரது சகோதரி இது குறித்து மேல் மறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் அவர்கள் இது மனித உரிமைக்கு எதிரான அநீதி என கூறியுள்ளார்.  தீர்ப்பால் அமெரிக்காவுக்கும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களுக்கும் இடையேயான உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்