#BREAKING: அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு.!
அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்.
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான ரூ.2500 டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கவும், அதிமுகவினர் வழங்கக்கூடாது என திமுக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை அதிமுகவினர் வழங்கும்போது முறைகேடு நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பரிசுத்தொகை டோக்கனில் அதிமுக தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருப்பது தவறானவை என பல புகார்கள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என நாளை மாலை 5 மணிக்குள் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.