பிரபல நடிகருக்காக உடனே ஓகே சொன்ன தமன்னா!
நடிகை தமன்னாவை சமீபத்தில் தொடங்கி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் பார்த்திருப்பீர்கள் . ரோஸ் கலர் உடையில் வந்து நடனமாடி அசத்தினார். பலரையும் இது கவர்ந்தது.
தமிழில் இப்போது ஓரிரு படங்கள் தான் கையில் இருக்கிறது. அண்மையில் அவர் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் வெங்கடேஷ் உடன் புதிய படத்தில் நடிக்க கமிட்டானார்.
தற்போது அவர் சயிரா ரெட்டி படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராம் சரண் இப்படத்தை ரூ 150 கோடியில் தயாரிக்கிறாராம்.
இதில் ஏற்கனவே அமிதாப் பச்சப், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி என பல பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். அண்மையில் இதன் புகைப்படங்கள் வெளியாகி பிரம்மிப்பை ஏற்படுத்தியது.